Pagetamil
இலங்கை

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து நோயாளர்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம்!

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.

பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக சமூக பொருளாதார சமூக உரிமைகளில் ஒன்றான சுகாதார உரிமைகளை மக்கள் அனுபவிப்பதை, அணுகுவதை உறுதி செய்யுமுகமாக இந்த கலவிஜயம் அமைந்திருந்தது.

குறிப்பாக இன்றையதினர் விடுதிகளில் நோயாளர்கள் எவரும் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இன்றைய களவிஜயத்தில் பெற்றுக்கொண்ட பல அவதானிப்புகள் தொடர்பில் எதிர்வரும் 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment