29.1 C
Jaffna
July 19, 2024
இலங்கை

கெஹலிய குடும்பத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 16 நிரந்தர வைப்பு கணக்குகள் மற்றும் மூன்று காப்புறுதி பத்திரங்களை முடக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முடக்கப்பட்ட நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் காப்புறுதி பத்திரங்களின் மதிப்பு ரூ. 93.125 மில்லியன் ஆகும்.

இதன்படி, கெஹலியவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு சொந்தமான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் மூன்று காப்புறுதி பத்திரங்கள் ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 53(1) இன் படி, பிரிவு 42 இன் கீழ் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக,  இந்த முடக்க உத்தரவு லஞ்ச ஆணைக்குழுவால் பெறப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இவர்களுக்கும் கடலட்டை பண்ணை வேண்டுமாம்

Pagetamil

பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது!

Pagetamil

புலிகள் பாடசாலைகளை மூடவில்லை

Pagetamil

பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த் தேசிய அரசியல் வலுப்பெறாது: பொ.ஐங்கரநேசன் 

Pagetamil

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கையெழுத்து!

Pagetamil

Leave a Comment