28.9 C
Jaffna
July 16, 2024
விளையாட்டு

ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

சிம்பாப்வேக்கு  எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை (BCCI) தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வருகின்ற ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அணியில் சஞ்சு சாம்சன்,சிவம் தூபே, ஜெய்ஸ்வால், ஆகியோரும் இடம் பிடித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த மூன்று வீரர்களையும் இந்திய கிரிக்கெட் பேரவை அதிரடியாக நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை தெரிவிக்கையில், “ உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்னும் நாடு திரும்பவில்லை.

பார்படாசில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் பார்படாசில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியில் இருக்கும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் தற்போது சிம்பாப்வேக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்தியா, சிம்பாப்வே ஹராரேவில் (Harare) தொடங்கவிருக்கும் இந்த போட்டிகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த மூன்று வீரர்களும் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Euro கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

Pagetamil

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது.

Pagetamil

ஒலிம்பிக் திருவிழாவிற்கு தயாராகும் பாரிஸ்.

Pagetamil

இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர்-இந்திய அணி இலங்கைக்கு வருகை

Pagetamil

மீண்டும் வெற்றியை சுவைத்த JAFFNA KINGS

Pagetamil

Leave a Comment