29.6 C
Jaffna
July 13, 2024
இந்தியா

இந்தியாவில் பாபாவை தரிசிக்க சென்றவர்கள் நெரிசலில் சிக்கிய சம்பவம்- 134 ஆக அதிகரித்துள்ள உயிரிழப்பு!

இணைப்பு:

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் பொலீஸார் தேடி வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நிகழ்ந்தது.

ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ள நிலையில் அந்த கோர விபத்து குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் செய்தி

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது.

இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனும் துறவியின் மடம் அமைந்துள்ளது.

இதில் செவ்வாய்க்கிழமை அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளு முள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர்.

இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர்.

மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாத்தரஸ் கூட்டத்தில் பாதுகாப்பு போலீஸார் அதிகம் இருக்கவில்லை.

காலை 9 மணிக்கு துவங்கியக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றுள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் கோடை வெப்பத்தில் வந்த மழையின் காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருந்துள்ளது. இச்சூழலில், கூட்டத்தினர் வெளியேற போதுமான வாசல் வசதி செய்யப்படவில்லை. இதில், ஒருவர் தடுக்கி விழ அவர் மீது அடுத்தடுத்து பலரும் விழுந்துள்ளனர். இது தெரியாமல் ஏற்பட்ட நெரிசல் அதிகரித்து பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஆன்மிகக் கூட்ட அமைப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மீதும் நடைபெறும் விசாரணையில் விரைவில் கைதுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது – கர்நாடக முதலமைச்சர் .

Pagetamil

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pagetamil

மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார்.

Pagetamil

நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை-இந்திய பிரதமர்

Pagetamil

இரண்டு நாட்கள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

Pagetamil

Leave a Comment