29.1 C
Jaffna
July 15, 2024
உலகம்

அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு-1 வர் உயிரிழப்பு 7 பேர் காயம்!

ரஷ்யாவில்  அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது மத்திய ரஷ்யாவின் ஸ்டெர்லிடாமக் நகரில் உள்ள பாஷ்கார்டோஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

”வீட்டு எரிவாயுவை கையாள்வதில் கவனக்குறைவாக மக்கள் உள்ளனர். எரிவாயு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் எரிவாயு வெடிப்புகள் பொதுவானவை என்று கூறப்படுகிறது. மேலும் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு கொலை முயற்சியா:பொலிஸாரின் விசாரணை-அவுஸ்ரேலிய பிரதமரின் ஆறுதல்

Pagetamil

விமானம் ஒன்று மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியதில்,  3 பேர் பலியாகினர்.

Pagetamil

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும்-ஜப்பானின் புதிய சட்டம்

Pagetamil

உலக மக்கள் தொகை இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

Pagetamil

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழப்பு – 130க்கும் மேற்பட்டோர் காயம்

Pagetamil

Leave a Comment