இலங்கை

2010 ஆட்டம்: பொன்சேகாவின் உதவியாளரின் பல் உடைத்த பொலிஸ் பொறுப்பதிகாரி இப்போது விலை செலுத்தினார்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, ​​ஐ.தே.கட்சியின் ஹக்மன தொகுதி ஒருங்கிணைப்புச் செயலாளரின் 3 பற்களை உடைத்து தாக்கியும், துப்பாக்கியால் சுடப் போவதாகவும் மிரட்டல் விடுத்த சம்பவத்தின் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் கமல் அமரசிங்கவிற்கு அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (150,000) நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

அந்த அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அரசாங்கம் ஒரு இலட்சம் (100,000) ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கே.ஹேமசிறி அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்து இறுதியாக அதன் முடிவை அறிவித்ததன் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜாவின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ அவர்களினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற வழக்குகளைப் போலவே பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் காவல்துறை கடமைப்பட்டுள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஹக்மான ஒருங்கிணைப்புச் செயலாளராக செயற்பட்ட மனுதாரர், 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இடத்துக்கு ஜீப்பில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பில் வினவிய வேளையில், நாளைய அரசியல் சந்திப்புக்காக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் கமல் அமரசிங்க,
மனுதாரரையும் மற்றவர்களையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்த பழங்கசிங்க என்பவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கி ஜீப்பில் இழுத்துச் சென்ற போது, ​​எதிர்த்த மனுதாரரின் முகத்தில் பொலிஸ் பரிசோதகர் தாக்கியதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் மனுதாரர் வாயில் இருந்து இரத்தம் வரும் வரை தாக்கியுள்ளனர். தாக்குதலால் மனுதாரர் மயங்கி விழுந்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்த சுவரொட்டிகளை கைப்பற்றிய பின்னர், பிரதிவாதிகள் மனுதாரரையும் மற்றவர்களையும் துப்பாக்கியால் சுடுவதாக அச்சுறுத்தினர், மேலும் பிரதிவாதிகள் வெளியேறிய பின்னர் மனுதாரர் கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மேற்படி தாக்குதலால் மனுதாரரின் முன்பற்கள் 3 கழற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்த பிரதிவாதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பழங்கசிங்க என்ற நபர் கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் மனுதாரர் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் இது புனையப்பட்ட கதை எனவும் தெரிவித்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காவல் நிலைய அதிகாரி தாக்கியதால் மனுதாரரின் பற்களை பிடுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பெஞ்ச், இந்த சம்பவம் காரணமாக மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தீர்ப்பில், மனுதாரரின் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை பொலிஸ் பொறுப்பதிகாரி மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் கமல் அமரசிங்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர். எம். டபிள்யூ. கே. ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு சார்பாக நடந்த பல பாதுகாப்பு, நிர்வாக அதிகாரிகள் பின்னாட்களில் சட்டத்தின் முன் நிற்க வேண்டியேற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜீவனை கைது செய்ய உத்தரவு

Pagetamil

கிளிநொச்சி வந்த வாகனம் விபத்து

Pagetamil

யாழில் நகைச்சுவை பாணி நிகழ்வு: தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போவதாக சில தனிநபர்களும், சிறு கட்சிகளும் உடன்படிக்கை!

Pagetamil

ஹிருணிகாவுக்கு பிணை

Pagetamil

ஊர்காவற்றுறை கோயிலில் நகை கொள்ளையடித்த உதவிக் குருக்கள் கைது!

Pagetamil

Leave a Comment