Pagetamil
இலங்கை

பணத்தை காலால் மிதித்த தியாகி மீது நீதிமன்றத்தில் வழக்கு!

யாழ்ப்பாணத்தில் யூடியூப் வீடியோக்களினால் தறிகெட்டு செயற்பட்ட தியாகி வாமதேவன் இன்று (22) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் மீது திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி வாமதேவன் என்ற நபரின் அநாகரிகமான செயற்பாடு பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது.

உதவி செய்கிறேன் என்ற பெயரில், விளம்பரம் தேடும் அவரது மனநிலையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அவரிடம் தனிப்பட்ட ரீதியில் உதவி தேடிச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்களை பலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்து, அவர் இராணுவத்தினரின் ஊடாகவே உதவித்திட்டங்களை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஆளுனர் பதவி கிட்டவில்லை. இந்த பின்னணியில், யூடியூப்பர்கள் அவரை மொய்க்க, அவர் வீடியோ போதைக்கு ஆளாகி, தன்னை மறந்து அநாகரிகமான வெளிப்பாடுகளை செய்ய தொடங்கினார்.

அண்மையில், தன்னை நேர் கண் பெண்ணின் முன்பாக நாணயத்தாள்களை மிதித்து, ரணில் தன்னை சந்திக்க வருவதாக அண்டப்புளுகு  புளுகினார்.

அவர் நாணயத்தாள்களை மிதித்தமைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய தியாகி மீது யாழ்ப்பாண பொலிசார் நடவடிக்கையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

அவர் திங்கள்கிழமை மீள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும். அன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

இதேவேளை, தியாகி அண்மையில் வெளிநாடு சென்றது, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களின் முன்னர் அவரால் நாய்கள் காப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அங்கு நாய்கள் முறையாக உணவு வழங்கப்பட்டு பராமரிக்கப்படுவதில்லை, நாய்கள் உயிரிழந்துள்ளன என்ற விபரம் வீடியோ ஆதாரங்களாக வெளிப்பட்டதையடுத்து, அவர் அதனை மூடியிருந்தார்.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment