தம்பிக்கு ஏற்பட்ட கவலை இது!

Date:

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த வாரம் இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலில் இந்தியா மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம்.

ஆனால் ஜெய்சங்கர் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ் கட்சிகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பில் பேசாது பதின் மூன்றாவது திருத்தத்தம் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமை மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எமது வடபகுதி மக்களின் பிரதானமான வாழ்வாதாரத் தொழிலாக விளங்குகின்ற கடற் தொழிலை எமது தொப்புள் கொடி உறவு என்று கூறும் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே நேரம் எமது தமிழ் அரசியல் வாதிகள் இந்தியா எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் இந்திய தரப்புகளுடன் பேசுவதில் மௌனம் காப்பது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இந்திய தரப்புடன் பேசும்போது தமிழ் பிரதிநிதிகள் 13 வது திருத்தத்தை பேசுவதை தவிர்த்து இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் தொடர்பில் பேச வேண்டும்.

ஏனெனில் இந்தியா நினைத்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் இலங்கை அரசாங்கத்தை பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.

ஆகவே தமிழ் அரசியல்வாதிகளிடம் வினியமாக ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் முடிவில்லா தொடரும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் ஓரணியாக இந்திய தரப்புகளுடன் பேசி சரியான முடிவை எட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்