28.9 C
Jaffna
July 16, 2024
இலங்கை

எரிகாயங்களுடன் ஒருவர் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார்.

இதன்போது எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்-சஜித் பிரேமதாச

Pagetamil

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

Pagetamil

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Pagetamil

அவசிய சேவைகள் தொடர்பாக சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்

Pagetamil

வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற் செய்கை அறுவடை விழா

Pagetamil

Leave a Comment