29.6 C
Jaffna
July 13, 2024
குற்றம்

நீதிபதிக்கு அல்வா கொடுத்தவரை தேடி வேட்டை!

பிஜியில் கடமையாற்றும் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 1.8 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் எடுத்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் நேற்று அறிவித்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி அருண காமினி அலுத்கேவினால் வாடகைக்கு விடப்பட்ட குடியிருப்புக்கு முன்பதிவு செய்வதாக குறிப்பிட்டு, நீதிபதியின்  வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகநபர் இரண்டு தடவை இந்தத் தொகையை திரும்பப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி உயர் நீதிமன்ற நீதிபதி பிஜிக்கு செல்வதற்கு முன்னர் மாலம்பேயில் உள்ள தனது குடியிருப்பை வாடகைக்கு விடுமாறு Booking.com இணையத்தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து, ஜூன் 14ஆம் திகதி, ஜூலை 1 முதல் 7ஆம் திகதி வரை முன்பதிவு செய்ய நீதிபதியை ஒருவர் ஒன்லைன் மூலம் தொடர்புகொண்டார். அதன்பிறகு பணத்தைச் செலுத்த ஒப்புக்கொண்ட அந்த நபர், இந்த நிதிப் பரிவர்த்தனை தொடர்பான OTPயை தனக்கு வழங்குமாறு நீதிபதியிடம் கேட்டுள்ளார்.

சந்தேகநபர் இந்த OTP குறியீட்டைப் பயன்படுத்தி நீதிபதியின் வங்கிக் கணக்கிலிருந்து மேற்படி தொகையை திரும்பப் பெற்றுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரங்களை CIDக்கு வழங்குமாறு மக்கள் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு CID நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பாதிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சார்பில் பொக்குனுவிட்ட ஜயந்த பீரிஸ் என்ற நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து பெண் விடுதலை!

Pagetamil

பிரிந்த காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட கடற்படைச்சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Pagetamil

திருமணம் முடிந்த 4வது நாள் கடத்தப்பட்ட யுவதி: காதலனின் வீட்டிலிருந்து மீட்பு!

Pagetamil

அழகிய இளம் பெண்கள், நடிகைகள்… இலங்கையை அதிர வைத்த விபச்சார வலையமைப்பு: வசமாக சிக்கிய நடிகை!

Pagetamil

நிர்வாண கோலத்தில் இளம் மனைவியின் சடலம்… கணவனும், நண்பனும் கைது; பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா?

Pagetamil

Leave a Comment