29.6 C
Jaffna
July 13, 2024
குற்றம்

திருமணம் முடிந்த 4வது நாள் கடத்தப்பட்ட யுவதி: காதலனின் வீட்டிலிருந்து மீட்பு!

திருமணம் முடிந்த நான்கு நாட்களின் பின்னர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது மணமகள் நேற்று முன்தினம் (17) மொரட்டுவ பகுதியிலுள்ள காதலனின் வீட்டில் மீட்கப்பட்டதாகவும், அவரை கடத்தியதாக கூறப்படும் காதலனையும், நண்பனையும் கைது செய்துள்ளதாகவும் தம்புத்தேகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மணமகள் 16 ஆம் திகதி காலை முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டார். வாகனமொன்றில் வந்த 3 பேர், அவரை இழுத்து வாகனத்தில் ஏற்றினர். அவரது சத்தம் கேட்டு, வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்தபோது, வாகனம் தப்பிச் சென்றது.

பிரதேசவாசிகள் சிலர் வாகனத்தை விரட்டிச் சென்றனர்.

இது தொடர்பாக தகவல் அந்த பிராந்தியத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டதுடன், இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மஹவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மணப்பெண் கடத்தல் சம்பவத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்ட மணமகள், மொரட்டுவ பகுதியில் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மொரட்டுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து யுவதி மீட்கப்பட்டார். அங்கிருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர், யுவதியின் காதலன். காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டார்.

மணப்பெண்ணின் முன்னாள் காதலன் மொரட்டுவையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் தம்புத்தேகம பகுதியில் கடையொன்றில் பணிபுரிந்துள்ளார். இதன் போதே, தம்புத்தேகம பகுதியை சேர்ந்த, யுவதியுடன் காதலில் விழுந்துள்ளார்.

யுவதியின் தந்தை பொலிஸ் உத்தியோகத்தர். யுவதியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மகளின் காதலை ஏற்காத பெற்றோர், நான்கு நாட்களின் முன்னர் அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைத்தனர்.

20 வயதான மணப்பெண், தனது காதலனுடன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து பெண் விடுதலை!

Pagetamil

பிரிந்த காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட கடற்படைச்சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Pagetamil

நீதிபதிக்கு அல்வா கொடுத்தவரை தேடி வேட்டை!

Pagetamil

அழகிய இளம் பெண்கள், நடிகைகள்… இலங்கையை அதிர வைத்த விபச்சார வலையமைப்பு: வசமாக சிக்கிய நடிகை!

Pagetamil

நிர்வாண கோலத்தில் இளம் மனைவியின் சடலம்… கணவனும், நண்பனும் கைது; பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா?

Pagetamil

Leave a Comment