29.6 C
Jaffna
July 13, 2024
கிழக்கு

வைத்தியர் நீரில் மூழ்கிப் பலி

நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் பாணம பகுதியில் நிகழ்ந்துள்ளது.

சனிக்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கநாதன் தக்சிதன் என்ற வைத்தியரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைதீவு பகுதியை சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதனின் மூத்த புதல்வரான இவர் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வருகின்றார்.

நேற்று உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வரும் வழியில் பாணமை கடலில் தவறுதலாக வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருப்பதாக ஆரமடப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது மரணமடைந்த வைத்தியரின் சடலம் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் காரைதீவைச் சேர்ந்த மருத்துவ துறைக்கு தெரிவாகிய மாணவனும் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு நிகழ்வு

Pagetamil

மின்சாரசபை ஊழியர்கள் போராட்டம்

Pagetamil

மட்டக்களப்பில் கரையொதுங்கிய சடலம்

Pagetamil

பழுகாமம் நிருபர் ……….பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டி

Pagetamil

இலங்கை முஸ்லிங்கள் எமது ஒற்றுமையை பலப்படுத்தி காஸா மக்களுக்காகவும் பிராத்திப்போம் : உலகில் நிம்மதி நிலவ குனூத் நாஷீலா ஓதுவோம் : புத்தாண்டு வாழ்த்தில் கலீலுர்ரஹ்மான்

Pagetamil

Leave a Comment