24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

ரூ.1700 சம்பள அதிகரிப்பை வழங்கிய பெருந்தோட்ட கம்பனி

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நேற்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் மொத்த நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தீர்மானித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு உடன்படப்போவதில்லை என தொடர்ந்தும் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நேற்று பிற்பகல் மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் வழங்கப்பட்டது.

மாத்தளை எல்கடுவ தோட்டக் கம்பனியின் கீழ் பணிபுரியும் 1500 தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக ETF மற்றும் EPF 202.50 கிடைத்ததன் பின்னர் 1902.50 சம்பள உயர்வு வழங்கப்படும் என எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் சுமித் ஜயரத்ன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

east tamil

வேலையில்லா பட்டதாரிகளின் ஆதங்கம்

east tamil

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

east tamil

“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

east tamil

தீயில் எரிந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Pagetamil

Leave a Comment