Site icon Pagetamil

குழந்தையை தாக்கியவரை சிறைச்சாலைக்குள் நையப்புடைத்த சக கைதிகள்: வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு, வெலிஓயா பொலிஸ் பிரிவில் 4 வயது குழந்தை உணவு உட்கொண்ட போது, மிருகத்தனமாக தாக்கியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “குகுல் சமிந்த” என அழைக்கப்படும் எம்.கே.சமிந்த என்ற சந்தேக நபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, கைதிகள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து நேற்று (07) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் தந்தை வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சுற்றுலா நீதவானிடம் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெலிஓயா ஹன்சவில கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சக கைதிகளே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தையை தாக்கும் வீடியோ வெளியானதையடுத்து, சந்தேகநபர் தனது இரண்டு மனைவிகளுடனும் வீட்டிலிருநது தலைமறைவாகினார். அவர்கள் திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களுக்கு உணவளித்த கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தையைத் தாக்கும் போது, சந்தேகநபரின் மகன் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கொடூர நடத்தையினால் ஆத்திரமடைந்த அனுராதபுரம் சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்குள் வைத்து அவரை நையக்புடைத்துள்ளனர். இதனால் கடுமையான பாதிப்படைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version