எல்.பி.எல் 2024 கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் தம்புள்ளை தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான பிரித்தானிய, பங்களாதேஷ் பிரஜை தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிடப்பட்டது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.