25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கியவரை தேடும் பொலிசார்!

4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் பதவிய சம்பதனுவர பகுதியைச் சேர்ந்தவர்.

குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் பதிவு செய்திருந்தார், இது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தக் குழந்தையை சந்தேக நபர் தாக்கியிருந்த போதிலும் அவருக்குப் பயந்து எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

Leave a Comment