28.4 C
Jaffna
June 23, 2024
இலங்கை

இந்தியாவிலிருந்தது படகில் மன்னாருக்கு வந்த 5 இளைஞர்கள் கைது!

இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 5 பேர், சட்டவிரோதமாக தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வந்த போது, திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலின் பிரமர் வேட்பாளர் சரத் பொன்சேகா: விரைவில் மார்ஷல் ஆகிறார்!

Pagetamil

ஊடகவியலாளர் வீட்டை தாக்கியவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Pagetamil

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மேன்முறையீடு இங்கிலாந்தில் தோல்வி!

Pagetamil

கிளிநொச்சியில் விபத்து!

Pagetamil

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment