கடும் மழை காரணமாக கொலவெனிகம, தெனியாய கல்பொத்தஹேன பகுதியில் வீடொன்றின் கொட்டகையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது பெரிய பாறை விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சுமார் 300 மீற்றர் உயரத்தில் இருந்து இந்த பெரிய கல் கீழே விழுந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியில் மோதி பாறை நின்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.