கன மழை: 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Date:

கனமழைக்கு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம்,பொது மக்களிடம் கோரியுள்ளது.

இன்று காலை 8.30 முதல் பிற்பகல் 2.00 வரையான காலப்பகுதியில் கிரிந்திவெல பிரதேசத்தில் 152 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதே காலப்பகுதியில் வரகாபொல பிரதேசத்தில் 138.5 மில்லிமீற்றர் மழையும், வத்துபிட்டிவல பிரதேசத்தில் 122.5 மில்லிமீற்றர் மழையும், அவிசாவளை பகுதியில் 98.5 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரி பிரதேசத்தில் 96.2 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்