ஊர்காவற்துறை சிறுமிகள் மரணம்: அதிர்ச்சியில் தாயார் வைத்தியசாலையில்!

Date:

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய சகோதரிகளே உயிரிழந்துள்ளனர்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு பால் வாங்க சென்றுள்ளனர். பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி , துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு , ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா , ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது இருவரும் உயிரிழந்தமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி படுகொலைக்கு சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை கோரி மட்டு மாநகரசபையில் தீர்மானம்!

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள...

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்...

வெளிநாட்டு பெண் மீது வெறிகொண்ட 81 வயது பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்