A/L பரீட்சையில் சாதித்த தமிழ் மொழி மூல மாணவர்கள் விபரம்!

Date:

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம் மற்றும் பொறியியல் தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளில் முதல் 10 இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு,

இதற்கமைய, பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவில் மட்டக்களப்பு இந்து கல்லூரிச் சேர்ந்த அஹமட் சகீர் மொஹமட் சப்வான் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல், குறித்த பாடப்பிரிவில் 10 ஆம் இடத்தை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் செல்வச்சந்திரன் ஶ்ரீமான் பெற்றுள்ளார்.

உயிர் முறைமைகள் தொழிநுட்ப பாடப் பிரிவில் 7 ஆம் இடத்தை கெகுனகொல்ல முஸ்லிம் மஹா வித்தியாலயத்தை சேர்ந்த ஹுசைன் பாருக் பாத்திமா அமீனா பெற்றுள்ளார்.

மேலும், உயிர் முறைமைகள் தொழிநுட்ப பாடப் பிரிவில் 9 ஆம் இடத்தை வெயாங்கொடையை சேர்ந்த மொஹமட் அசார் அஸ்மா ஹைமான் பெற்றுள்ளார்.

இதேவேளை, பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Science) அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் (physical Science) கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த W.A சிராத் நிரோத முதலிடத்தை பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தை சேர்ந்த தசுன் ரித்மிக விதானகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த முல்வில ரலலாகே ஷெஹானி நவோத்யா முல்விலகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

பாணந்துறை மகளிர் கல்லூரி மாணவி ஷெஹாரா சிதுமினி புஞ்சிஹேவா வணிகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

உயிர் முறைமைகள் தொழிநுட்பம் பிரிவில் முதலாம் இடத்தை எஹலியகொட மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருலு சிஹில்திய பல்லியகுரு என்ற மாணவர் பிடித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்: சாரதி, சிறுமி பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று,...

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்