14 வயது பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய முல்லைத்தீவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸார் நேற்று முன்தினம் (29) கைது செய்துள்ளனர்.
இந்தப் மாணவி பாடசாலை முடிந்ததும், பேருந்து வரும் வரை இந்த வர்த்தகரின் கடையிலேயே காத்திருப்பது வழக்கம்.
மாணவியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவரை ஏமாற்றி, வர்த்தகர் உடலுறவு கொண்டதால் பாடசாலை மாணவி கர்ப்பமானார்.
சிறுமிக்கு திடீரென சில அறிகுறிகள் தென்பட்டதால் அவரது தாயார் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமியை பரிசோதித்த வைத்தியர் அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த சிறுமியிடம் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் வயதையொத்தவரே, வர்த்தகரின் மூத்த மகள் என பொலிசார் தெரிவித்தனர்.




