சுழிபுரம் திருவடியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி இன்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருவடி நிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அக் காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அப் பகுதி மக்கள் உட்பட அரசியல் வாதிகள் என பலரும் அங்கு திரண்டு காணி அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு பொது மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அங்கு காணி அளவீடு செய்வதற்கு வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தினர் காணி அளவீடு செய்யாமலே திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.