Pagetamil
இலங்கை

உணவுக்காக நிறுத்தப்பட்ட திருகோணமலை பயணிகள் பேருந்து… குடிபோதை ஆசாமி பேருந்தை கிளப்பிக் கொண்டு தப்பியோட்டம்!

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது, ​​குடிபோதையில் வந்த நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி, அதை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்ததாகவும், மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து, மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று இரவு 12:00 மணியளவில் கலேவெல பகுதியில் ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டது.

பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது, ​​இப்பன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹொட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர், ஹோட்டலை விட்டு வெளியேறி, பேருந்தில் ஏறி, அங்கிருந்த சாவியுடன் பேருந்தை ஸ்டார்ட் செய்து, பயணிகளுடன் பேருந்துடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைக் கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி  பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர். குடிபோதை ஆசாமி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து ஏற்கனவே நான்கு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment