பிரெஞ்ச் ஓபன்: களிமண் தரை ராஜா முதல் சுற்றிலேயே அவுட்!

Date:

தனது கடைசி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2வது வருவது பிரெஞ்ச் ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மகத்தானது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட...

‘ஒரு ரஷ்ய சிப்பாயின் கால் எங்கு அடியெடுத்து வைக்கிறதோ, அது நம்முடையது’: புடின்!

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே மக்கள் என்றும், "அந்த வகையில் முழு உக்ரைனும்...

வாகனங்களின் அங்கீகரிக்கப்படாத பாகங்கள் ஜூலை 1 முதல் அகற்றம்!

வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் மாற்றங்களை அகற்றும் திட்டம் ஜூலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்