திருமலையின் பூர்வீக நிலங்கள் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு; துறைமுக அதிகாரிகள் மக்களுக்கு அச்சுறுத்தல்: இம்ரான் எம்.பி தலையீடு

Date:

திருகோணமலை முத்துநகர் பிரதேசத்தில் பல தசாப்தங்களாக பொதுமக்கள் குடியிருந்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளை இந்தியாவின் சில தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நோக்குடன் அக் காணிகளில் வசித்துவரும் மக்களை அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்திருந்தது.

இதனை அடுத்து அங்கு எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறித்த பகுதிக்கு நேற்று (25) சனிக்கிழமை சென்று அப்பிரதேச மக்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடினார்.

இப்பகுதியில் பல தசாப்தங்களாக மக்கள் குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இக்காணிகள் 1984 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த பிரட்சனை தோற்றம் பெற்றது.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடஉள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பொதுமக்களிடம் தெரிவித்திருந்ததுடன் திருகோணமலை நகரின் பெரும்பாலான பிரதேசங்கள் இவ்வாறு இந்திய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல பிரதேசங்களில் துறைமுக அதிகார சபையினரினால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் நௌபர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்