உடத்தலவின்ன காதி நீதிமன்றத்தில் விவகாரத்து சான்றிதழை வழங்குவதற்காக 4,500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் காதி நீதிபதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.