யாழ்ப்பாணம்: அக்காவின் கணவன் கொடூரம்… இளைஞன் பலி!

Date:

அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குவில், தாவடி  பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த 2ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

வரதராசா நியூட்சன் (23) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞனின் அக்காவின் கணவருக்கும்- இளைஞனின் தந்தைக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் மீது, அக்காவின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார். இளைஞனின் தந்தை மீதும் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார்.

இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து, அக்காவின் கணவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்தனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்