மீனவர் விவகார கலந்துரையாடல்

Date:

வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று இடம்பெற்றது.

வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

வடமாகாணம்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரசினைகளை முன்வைத்தனர். தொடர்சியாக தமது பிரசினைகளை தமது சார்பில் பாராளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்