வடமாகாணத்துக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (24) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.
இன்று யாழ் நகரில் அமைக்கப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, அதன் பின், யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும், பின்னர் இளைஞர் சேவை மன்ற நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.