பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பதவி நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ரெஹான் ஜயவிக்ரம, உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரரின் கூற்றுப்படி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்த நாளான மே 9, 2024 அன்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய கமகே, தன்னை “ஒரு அநீதிக்கு ஆளானவர் என்றும், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெண்கள் மீதான தாக்குதல்” என்றும் சித்தரித்துள்ளார், மேலும் இது வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அடிப்படையிலான “அரசியல் சதி”யின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
டயானா கமகே உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார், இது 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனங்களை அவமதிக்கும் சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.