28.2 C
Jaffna
June 12, 2024
உலகம்

மோசமான காலநிலையால் 68,000 பேர் பாதிப்பு: மரம் முறிந்து 2 பெண்கள் பலி!

15 மாவட்டங்களில் பதினெட்டாயிரத்து இருநூற்று முப்பது (18,230) குடும்பங்களைச் சேர்ந்த அறுபத்தெட்டாயிரத்து எழுபத்தொன்பது (68,079) பேர் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அனர்த்தம் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் கூறுகிறது.

அனர்த்த நிலைமை காரணமாக 72 பேர் தமது 25 உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 2 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் மேலும் 531 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் கூறுகிறது.

மேலும், அனர்த்த நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்த 27 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிகமாக 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் படி பதினோராயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (11,194) குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்தி இரண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தேழு (42,567) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், புத்தளம், ஹம்பாந்தோட்டை, பதுளை, மாத்தறை, குருநாகல், பொலன்னறுவை ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 5,103 குடும்பங்களைச் சேர்ந்த 21,867 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடும் மழை காரணமாக திசாவெவ, ஹங்கமுவ, கலாவெவ, தெதுரு ஓயா, தப்போவ மற்றும் குக்குலே கங்கை ஆகிய பகுதிகளின் வான் கதவுகள் நேற்று (22ஆம் திகதி) திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வள்ளலாவிட்ட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுரவல ஆகிய பகுதிகளிலும் நேற்று வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அவற்றில் புளத்சிங்கள – மொல்காவ வீதி 5 அடிக்கு கீழ் நீரில் மூழ்கியிருந்தது.

மேலும், கிங் கங்கை, களனி கங்கை, களு கங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் நேற்று பிற்பகல் வரை நிரம்பி வழிந்தன. மீண்டும் மழை பெய்தால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23ஆம் திகதி) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில், இரத்தினபுரி, கேரகல பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 155.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானது.

கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் எனவும், கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும் வரை இந்த கடற்பகுதியில் கடல் மற்றும் மீனவ மக்கள் படகில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மரங்கள் விழுந்ததில்  நேற்று இருவர் உயிரிழந்தனர்.

மஹவெவ மெதகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஹஷினி இஷார லங்கா என்ற ஒரு பிள்ளையின் தாயும், கல்முருவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி என்ற 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் உயிரிழந்துள்ளனர்.

திவுலபிட்டிய மரந்தகஹமுல நகரில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த வெசாக் பந்தல் நேற்று (22) பலத்த காற்றினால் இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் வீசிய வேளையில் பந்தலில் 5 பேர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அவர்களில் இருவர் பந்தலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் இவ்விபத்தை எதிர்கொண்டதாகவும் திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜோ பிடன் முன்மொழிந்த இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தத்தை ஐ.நா பாதுகாப்புசபை ஆதரித்தது!

Pagetamil

துணை ஜனாதிபதியுடன் மாயமான விமானம்!

Pagetamil

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவு எதிரொலி: பிரான்சில் திடீர் பொதுத்தேர்தல் அறிவிப்பு!

Pagetamil

ஜேர்மனியில் கஞ்சா புகைத்து விட்டு வாகனம் செலுத்த அனுமதி!

Pagetamil

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்

Pagetamil

Leave a Comment