பாக்கு நீரிணையை கடக்க தயாராகும் திருமலை ஸாஹிரா மாணவன்

Date:

திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியின் மாணவன் பாக்கு நீரிணையை கடக்கும் சாதனை பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியின் மாணவன் பஃமி ஹசன் சலாமா எதிர் வரும் யூன் 15 ந் திகதி பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த தயாராக உள்ளதாக இதன்போது தெரிவித்தார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இவ் சாதனை முயற்ச்சிக்கான தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்ததுடன்

குறித்த சாதனை பயணம் இந்தியாவின் தனுஸ்கோடி,அரிச்சல்முனையிலிருந்து தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை 8 மணி நேரத்தில் தாம் கடக்க எண்ணியுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சலாமா கூறினார்.

கடந்த 18 ந் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையிலிருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்ச்சி அடிப்படையில் நீந்தி கடந்ததுடன்

இவருக்கான நீச்சல் பயிற்ச்சிகளை இலங்கை விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.

இவ் பயிற்றுநர் 2021 ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணிநேரம்,19 நிமிடம்,58 செக்கனில் நீச்சலை நிறைவு செய்து,ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணிநேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த திருகோணமலையைச் சேரந்த ஹரிகரன் தன்வந்தையையும் இவரே பயிற்றுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் முஹைஸ் உப அதிபர் மர்ழியா குறித்த மாணவனின் தந்தையும் ஊடகவியலாளருமான யூசுப் பஃமி பாடசாலை அபிவிருத்தி சங்க,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

கள்ளக்காதலனுடன் ரூம் போட்டு பிறந்தநாள் கொண்டாட்டம்: கணவனை கண்டதும் சுவரேறி குதித்து தப்பியோடிய இளம்பெண் (Video)

தனது பிறந்தநாளை கொண்டாட கள்ளக்காதலனுடன் ஓயோ சொகுசு ஹொட்டலுக்கு சென்ற இளம்பெண்,...

நடத்தையில் சந்தேகம்: நடிகையை கத்தியால் குத்திய கணவர்

கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி. இவர் 'அம்ருததாரா'...

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்