லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்ச் பிக்சிங் குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு அமைச்சில் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுக்கள் எந்த போட்டியுடன் தொடர்புடையது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கொழும்பில் நேற்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழலுக்கு எதிரான அணி கலந்துகொண்டது.
கைது செய்யப்பட்ட LPL அணியின் உரிமையாளர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.