முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி இரகசிய பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றவாசிகள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகவும் தம்மை கைது செய்ய உள்ளதாகவும் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டு, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜரானார்.
5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல உத்தரவிட்ட நீதவான், பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.