இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Date:

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை 7 பேரை ஜூன் 3 வரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை படகு ஒன்றை சிறைபிடித்தனர். அதிலிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை ஞாயிறன்று தூத்துக்குடி அழைத்து வந்து தருவைகுளம் மெரைன் போலீஸில் ஒப்படைத்தனர்.

அவர்கள் மீது போலீஸார் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று (மே 20) ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ராஜா குமார், இலங்கை மீனவர்கள் 7 பேரையும் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் இலங்கை மீனவர்களை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்