தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய இலங்கை தமிழ் அரசு கட்சியன் மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
வவுனியாவிலுள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் இன்று (19) காலை 10 மணிக்கு கூட்டம் இடம்பெறும்.
தமிழ் பொதுவேட்பாளர், கட்சி எதிர்கொள்ளும் வழக்குகள் தொடர்பில் ஆராய இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பொதுவேட்பாளர் விவகாரத்தில் பதிலளிக்க 2 வார அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த பின்னணியில் இன்றைய கூட்டம் நடைபெறுகிறது.
இன்று தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் அரசு கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்காது என நம்பப்படுகிறது. இதேவேளை, இன்றைய கூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளராக சி.சிறிதரன் போட்டியிட வேண்டுமென சிலர் முன்மொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.