நள்ளிரவு வீட்டு விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு உள்ளான வைத்தியரும் அவரது மனைவியும் ஹலவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹலவத்தை குருந்துவத்தை கிராமத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கத்திக்குத்து தாக்கியதில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் 33 வயதான சாமுவேல் ஜோன்சன் மற்றும் அவரது 20 வயது மனைவி சுப்ரமணியம் பிரித்திகா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வைத்தியரின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அங்கிருந்த ஒருவரே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.