இலங்கை

O/L பரீட்சை முடிந்ததும் பாடசாலையை வணங்கிவிட்டு சென்ற மாணவர்கள்!

திம்புலாகலை கல்வி வலயத்திற்குட்பட்ட லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவினர் பரீட்சை முடிவடையும் நாளான நேற்று (15) பரீட்சை மேற்பார்வையாளர்களை வணங்கிவிட்டு, பாடசாலை பிரதான வாயிலுக்கு வந்து, வாசலில் பூங்கொத்துகளை தொங்கவிட்டு பாடசாலைக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

பொலன்னறுவை, திம்புலாகலை லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் 76 மாணவர்கள் இந்த வருடம் க.பொ.த சாதரணதர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பரீட்சை முடிந்ததும் மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளர்களை வணங்கி, பிரதான வாயிலில் மலர் கொத்துக்களை வைத்து, பாடசாலைப் பாடலை இசைத்து தாம் படித்த பாடசாலையை வணங்கியதாக லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலய அதிபர் பி.ஏ. அபேசிங்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment