இலங்கை

வீட்டு மோசடியில் முன்னாள் சிஐடி பொறுப்பதிகாரிக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.

ஒன் டிரான்ஸ் வொர்க்ஸ் சதுக்கத்தில் நான்கு வீட்டுமனைகளை தருவதாக கூறி 770 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக வர்த்தகர் ஒருவர் தனிப்பட்ட முறையில் முறைப்பாடு செய்த போதே குறித்த நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த ரவி வைத்தியலங்கார சந்தேக நபராக பெயரிடப்பட்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். .

ரவி வைத்தியலங்காரவின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து குடிவரவு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சந்தேக நபராக பெயரிடப்பட்ட நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், இயக்குநராகக் கூறப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் கத்யால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நவம்பர் 8, 2018 அன்று, நான்கு வீடுகளை வாங்குவதற்கு US$ 1,399,999 தொகை வழங்கப்பட்டது. வீடு வழங்கப்பட்ட நிலையில், ரூ.75 மில்லியன் காசோலைகளை  வழங்கியதாக வர்த்தகர்களான கம்கானமலாகே சந்திரஸ்ன செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் காணி பதிவாளர் திணைக்களம், காணி பதிவாளர் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஜானகி சிறிவர்தன ஆகிய 09 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கைகளுக்காக எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment