Pagetamil
கிழக்கு

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை (16) மூதூர் நீதிமன்றம் நீக்கியது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .

சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டிருந்தவர்களின் வழக்கு புதன்கிழமை (15) விசேட நகர்த்தல் பத்திரம் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில், ” எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய எனது வாதத்தை அடுத்து மூதூர் நீதிபதி தஸ்னீம் பெளசான் பானு இவ் தடை நீக்கல் தொடர்பான உத்தரவை விடுத்தார்.

சென்ற12 ம் திகதி இரவு கஞ்சி வழங்கியமை மூலம் நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆணும்,மூன்று பெண்களும் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 13 ந் திகதி மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 27 திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையினால் புதன்கிழமை (15) அவர்களுக்கான பிணை வழங்கப்படவில்லை” என்றார் .

இதையும் படியுங்கள்

வயலில் நின்றவரை தாக்கிய மின்னல்

Pagetamil

முஷாரப் என்ற நபருக்காக மக்கள் இல்லை; கட்சிக்காவே உள்ளனர்: முன்னாள் உதவித் தவிசாளர் தாஜுதீன்

Pagetamil

சிகை அலங்கரிப்பு நிலைய கதிரையில் உட்கார்ந்த நிலையில் 3 நாட்களாக இருந்த சடலம்!

Pagetamil

சம்மாந்துறையில் மயில் – குதிரை மோதல்: வேட்பாளரும், சகோதரரும் வைத்தியசாலையில்!

Pagetamil

தாயை கொன்ற மகன்

Pagetamil

Leave a Comment