இலங்கை

இராணுவத்தளபதி பற்றிய வீடியோக்களை அகற்ற யூடியூப் உள்ளிட்ட தரப்புக்கு உத்தரவு!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவை அவமதிக்கும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்ட அனைத்து அவதூறு மற்றும் வெறுக்கத்தக்க வீடியோக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளை உடனடியாக நீக்குமாறு லங்கா வி நியூஸ் இணையத்தளத்தின் உரிமையாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இணையதள உரிமையாளர் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட நான்கு நபர்கள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட அறிக்கைகளை மேலும் இணையத்தில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், மே 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிபந்தனை உத்தரவு மற்றும் அழைப்பாணையை எதிர்மனுதாரர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ஊடக செயற்பாட்டாளர் விதாரனகே துஷார சாலிய ரணவக்க எனப்படும் மிச்சேல் ரணவக்க மற்றும் லங்கா வி நியூஸ், ஓவர்சீஸ் ஹரிங் எனப்படும் லங்கா நியூஸ் தரப்பினர் மற்றும் அமெரிக்காவில் உள்ள யூடியூப் நிறுவனத்திற்கு தடை உத்தரவும் நிபந்தனை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், முதலாவது பிரதிவாதி இணையத்தின் ஊடாக தனது வாடிக்கையாளருக்கு எதிராக  பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுகிறார். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment