குற்றம்

வங்கியில் மோசடியாக கடன் பெற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

தனது மகனின் பெயரில் போலியான தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச வங்கிக் கிளையொன்றில் இருந்து 3.4 மில்லியன் ரூபா கடனாக பெற்றுக் கொண்டதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கபுகொடுவ, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 7, அலெக்ஸாண்ட்ரா பிளேஸில் வசிக்கும் பொலிஸ் அத்தியட்சகரின் மகன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் வர்த்தக வங்கியொன்றில் ஒருவர் தனது பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துள்ளதாகவும், தான் அந்த வங்கியில் அவ்வாறான கணக்கை ஆரம்பிக்கவில்லை எனவும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

நீண்ட விசாரணையில், இப்படி மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், அந்தந்த வெளிநாட்டு வங்கியின் கடன் துறையைச் சேர்ந்த இருவர் மோசடி விசாரணைப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டனர். கெமுனு திஸாநாயக்க என்ற வர்த்தகரின் பெயரில் கணக்கை ஆரம்பித்து கடனை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்போது தொழிலதிபர் வெளிநாட்டில் இருந்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பி.யிடம் கேட்டபோது, அப்படிப்பட்டவரைத் தெரியாது என்று கூறியிருந்தார்.

ஒய்வு பெற்ற இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது மகனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் என காட்டிக்கொண்ட நபர் நீண்டகாலமாக வெளிநாட்டில் இருந்ததாக மோசடி விசாரணைப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த மோசடியில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தொடர்பு தெளிவாக தெரியவந்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

வங்கியில் பெறப்பட்ட முழு கடன் தொகையும் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பியினால் பெறப்பட்டதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக மோசடி விசாரணைப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள சர்வதேச வங்கி ஒன்றின் கிளையொன்றில் இருந்து பெறப்பட்ட உரிய கடன் தொகையுடன் கூடிய காசோலை வரவு வைக்கப்பட்டு, இலங்கையில் உள்ள முன்னணி தனியார் வர்த்தக வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பி.யின் மகன் பெயரிலும் கணக்கு தொடங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக மோசடி விசாரணைப் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வைத்தியர், மனைவி மீது கத்திக்குத்து

Pagetamil

4 வருடங்களின் முன் காணாமல் போன இளம்தாயின் சடலம் மீட்பு!

Pagetamil

மொடலிங் கற்க சென்ற யுவதி வல்லுறவு: மழைக்கு ஒதுங்கி மது அருந்தியதால் விபரீதம்!

Pagetamil

நூதன மோசடி: அசுத்தமான ஆடை அணிந்ததாக கூறி பெண்ணை கைது செய்து கொள்ளையடித்த போலி சுகாதார பரிசோதகர்கள் கைது!

Pagetamil

15 வயது சிறுமி போதையூசி ஏற்றப்பட்டு கூட்டு வன்புணர்வு: 20 வயது யுவதி, 3 இளைஞர்கள் கைது!

Pagetamil

Leave a Comment