சினிமா

மோடியின் ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா

கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்தச் சூழலில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்தது.

“மும்பை – நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?

இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது.

இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்’: ஜி.வி.பிரகாஷ் குமார்

Pagetamil

ஜி.வி.பிரகாஷை பிரிந்தது ஏன்? – பாடகி சைந்தவி விளக்கம்

Pagetamil

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்!

Pagetamil

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா

Pagetamil

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாளில் ரூ.4 கோடி வசூல்!

Pagetamil

Leave a Comment