இலங்கை

‘போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்’: ஜேவிபி

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனப் போர் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பேசிய அவர், இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூற உரிமை உண்டு என்றும், முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக சம்பூரில் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். .

நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment