இலங்கை

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

குறித்த கூட்டத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகிறது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், நிணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment