கிழக்கு

கடலுக்குள் விழுந்த டிப்பர் மீட்பு!

கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே இன்று (15) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கண்காணிப்பில் பாரிய கற்கள் போடப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கல் அணைகள் அமைத்து கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்தது.

எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தடை கல்முனை, சம்மாந்துறையில் விலக்கல்!

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சிக்கு கல்முனை நீதிமன்றம் தடைநீக்கம்

Pagetamil

திருகோணமலையில் கைதான 4 தமிழர்களுக்கும் பிணை!

Pagetamil

வாழைச்சேனையில் நாய்கள் காப்பகம்

Pagetamil

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment