குற்றம்

நூதன மோசடி: அசுத்தமான ஆடை அணிந்ததாக கூறி பெண்ணை கைது செய்து கொள்ளையடித்த போலி சுகாதார பரிசோதகர்கள் கைது!

பொது சுகாதார பரிசோதகர்கள் போல் வேடமணிந்து வீதியோரம் சென்று கொண்டிருந்த பெண்ணை அசுத்தமாக இருப்பதாக கூறி கைது செய்வதாக அச்சுறுத்தி கொள்ளையடித்த மூவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அசுத்தமான உடையில் பொதுப் பாதையில் சென்றதற்காக கைது செய்யப்பட்டதாகக் கூறி, மூன்று பேரும் பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏறும்படி வற்புறுத்தியதாகவும், பின்னர் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையான இந்த மூன்று சந்தேக நபர்களும் 38, 47 மற்றும் 70 வயதுடையவர்கள் என கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை, தெமட்டகொட மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் மூவரும் இந்த செயற்பாட்டு முறையைப் பயன்படுத்தி PHIகளாகக் காட்டிக்கொண்டு கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பாதுகாப்பு கமெராக்களை பரிசோதித்து முச்சக்கர வண்டி இலக்கம் அடையாளம் காணப்பட்டு சந்தேக நபர்களை அடியம்பலம மற்றும் வல்பொல பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வைத்தியர், மனைவி மீது கத்திக்குத்து

Pagetamil

4 வருடங்களின் முன் காணாமல் போன இளம்தாயின் சடலம் மீட்பு!

Pagetamil

வங்கியில் மோசடியாக கடன் பெற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

மொடலிங் கற்க சென்ற யுவதி வல்லுறவு: மழைக்கு ஒதுங்கி மது அருந்தியதால் விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமி போதையூசி ஏற்றப்பட்டு கூட்டு வன்புணர்வு: 20 வயது யுவதி, 3 இளைஞர்கள் கைது!

Pagetamil

Leave a Comment