சினிமா

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்!

ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி இருவரும் தங்களின் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது காதலியான பாடகி சைந்தவியைக் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், “ஆழ்ந்து யோசித்த பின்னர், நானும் சைந்தவியும் எங்களின் 11 ஆண்டுக்கால திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். இருவரின் மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர மரியாதையை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் எங்களின் இந்தத் தனிப்பட்ட முடிவை மதித்து, புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இருவரும் பிரிவதைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவே சிறந்தது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களின் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு அவசியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

சைந்தவியும் இதைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோடியின் ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா

Pagetamil

‘தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்’: ஜி.வி.பிரகாஷ் குமார்

Pagetamil

ஜி.வி.பிரகாஷை பிரிந்தது ஏன்? – பாடகி சைந்தவி விளக்கம்

Pagetamil

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா

Pagetamil

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாளில் ரூ.4 கோடி வசூல்!

Pagetamil

Leave a Comment