இந்தியா

ஹொட்டல் அறையில் 2 காதலர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி: திடீரென நுழைந்த கணவனால் களேபரம்!

பெண் மருத்துவர் ஒருவர் ஹொட்டல் அறையில் 2 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த போது, திடீரென கணவர் உள்ளே புகுந்ததால் பெரும் களேபரமானது.

உத்தர பிரதேசத்தில்இந்த சம்பவம் நடந்தது.

கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள்தான். இருவரும் ஓராண்டாக பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் கணவருக்கு வந்துள்ளது. இதுபற்றிய ரகசிய தகவல் கிடைத்து கணவர் சில நாட்களின் முன்னர் இரவு மனைவியை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

இதில், காஸ்கஞ்ச் நகரில் உள்ள ஆடம்பர ஹொட்டல் ஒன்றிற்குள் மனைவி நுழைந்துள்ளார்.

இதன்பின், இரவு நேரம் சென்றதும் நள்ளிரவில் மனைவி தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் உறவினர்களுடன் நுழைந்திருக்கிறார். அப்போது, அந்த அறையில் அவருடைய மனைவியுடன் வேறு 2 பேர் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதனை கண்டதும் கணவர் ஆத்திரமடைந்து உள்ளார். அவரும், அவருடன் வந்திருந்த உறவினர்களான 2 ஆண்களும் சேர்ந்து, மனைவி மற்றும் அவருடன் இருந்த 2 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அது சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரலானது.

இந்த வீடியோவானது, ஆண்களுக்கான விவகாரத்திற்கான இந்திய கவுன்சில் சார்பிலான எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மனைவியுடன் இருந்தவர்கள் அவருடைய காதலர்கள் என கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காசியாபாத் நகரை சேர்ந்தவர். மற்றொருவர் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள்  கணவர், அவருடைய 2 உறவினர்கள் மற்றும் மனைவியின் 2 காதலர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மனைவியை போலீசார் கைது செய்யவில்லை.

நடந்த சம்பவம் பற்றி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மனைவி மற்றும் அந்த 2 பேருக்கு எதிராக தவறாக நடந்து கொண்டனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கணவருக்கு எதிராக மனைவி புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி ஆகியவை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நீக்கம்!

Pagetamil

பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தமிழ் நடிகையை பலாத்காரம் செய்த அம்மன் கோயில் பூசாரி!

Pagetamil

பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்ட காதலி – காதலன் உயிரிழந்த சோகம்!

Pagetamil

சிலரின் தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி கை நழுவியது: நேரு மீது ஜெய்சங்கர் மறைமுக குற்றச்சாட்டு

Pagetamil

ரேபரேலி தொகுதியில் ராகுல் சென்ற முடி திருத்தகம் பிரபலமாகிறது!

Pagetamil

Leave a Comment